மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!

0
235

புத்தளம் பாலாவி பகுதியில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்தார்.
சமைத்துக்கொண்டிருந்த வேளை வெளிச்சம் போதாமையால் மின்குமிழை பொருத்துவதற்கு முற்பட்ட வேளையிலேயே மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்மஸ் தினமான நேற்று அதிகாலை 5.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புத்தளம் தில்லையடியை சேர்ந்த 47 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.