மின்சார திருத்த சட்டமூலம் இன்று முதல் அமுல்!

0
159

2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சட்டத்தை திருத்துவதற்கான, திருத்தச் சட்டமூலத்தில் இன்று கையொப்பமிட்டு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அதனை சான்றுப்படுத்தியுள்ளார்.
மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால், கடந்த 9 ஆம் திகதி, குறித்த திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், மின்சார திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு, 84 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் வழங்கப்பட்டது.
மின்சாரப் பிறப்பாகத்திற்கு விலை கோரும் நடைமுறையொன்றில் பங்குபற்றுவதற்கு, எவரேனும் ஒருவர், இதன் மூலம் அனுமதிக்கப்படுவார்.
அதற்கமைய, இன்று முதல், இலங்கை மின்சார திருத்தச் சட்டம், 2022 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்கச் சட்டமாக, இலங்கைச் சட்டக் கட்டமைப்பில் இணைந்துக் கொள்ளப்பட்டுள்ளது.