2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுலாக்க விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு நேரத்தை மேலும் அதிகரிப்பதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்துள்ளதாக பொதுச்சேவைகள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினத்தில் இருந்து மின்வெட்டு நேரத்தை 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுமாக அதிகரிக்க மின்சார சபை கோரிக்கை விடுத்திருந்தது.
மின்வெட்டு நேரத்தை அதிகரிக்கக் கோருவதை, முறையான காரணங்களால் நியாயப்படுத்த முடியாமல் போனமையே
கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என பொதுச்சேவைகள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.