மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை!

0
337

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான டீசல் பற்றாக்குறையால் நாட்டின் முன்னணி மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகள் செயலிழந்து காணப்படுகின்றன.

மேலும், நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதால், மின் உற்பத்தி செய்யும் பணியில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலைமை காரணமாக நாடளாவிய ரீதியில் பல மணிநேரங்கள் மின்வெட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.