Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
நியாகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட அமரகம பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தமது வீடுகளுக்கான மின் கட்டண பட்டியலுடன் அமரகம உப தபால் நிலையத்திற்கு வந்து அனைத்து பட்டியல்களையும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு பதிவு தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.மோசமான வானிலை காரணமாகமாகவும் பொருளாதார நிலை காரணமாகவும் தம்மால் இந்த மின்கட்டணத்தை கட்ட முடியாமல் தவிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே மின்கட்டணத்தை செலுத்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிடம் ஆதரவை எதிர்பார்ப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நாமல் ராஜபக்ஷவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணத்தை ( சுமார் 2.6 மில்லியன் ரூபாய்கள்) தனது சொந்த நிதியிலிருந்து செலுத்தியதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.