மின் தடையால் நாடாளுமன்ற செயற்பாடுகளிலும் பாதிப்பு!

0
144

நாடு முழுவதிலும் மின்சாரத் தடை இன்று அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற செயற்பாடுகளிலும், மின்தடை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
வழமையாக நாடாளுமன்றத்துக்கு செல்பவர்களை நாடாளுமன்றத்தின் நுழைவாயில் உள்ள சோதனை நிலையத்திலும், நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் உள்ள சோதனை நிலையத்திலும் சோதனை செய்ததன் பின்னரே, உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த இரு சோதனை நிலையங்களிலும் நாடாளுமன்றத்துக்குள் எடுத்துச் செல்லப்படும் பொருள்கள், பைகள் உள்ளிட்டவை ஸ்கேன் இயந்திரத்தின் ஊடாக சோதனை செய்யப்படும்.
எவ்வாறாயினும் மின்தடைக் காரணமாக நாடாளுமன்றத்தின் நுழைவாயிலில் உள்ள சோதனை நிலையத்தின் ஸ்கேன் இயந்திரம் இயங்கவில்லை.
இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சோதனை நிலையத்தில் மாத்திரமே நாடாளுமன்றத்துக்குள் எடுத்துச் செல்லப்படும் பொருள்கள் ஸ்கேன் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.