மின் துண்டிப்பு நேரம் தொடர்பான அறிவிப்பு!

0
196

நாட்டில், இன்று முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், சுழற்சி முறையில், ஒரு மணித்தியாலயம், மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. இது தொடர்பில், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், நாடளாவிய ரீதியில், சுழற்சி முறையில், ஒரு மணித்தியாலம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பகுதிகளில், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதிக்குள், ஒரு மணித்தியால மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.