எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) கொழும்பிலுள்ள மியன்மார் மற்றும் தாய்லாந்து தூதரகங்களுக்கு விஜயம் செய்து இந்த அனர்த்தம் தொடர்பாக தனது வருத்தத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளார்.
மியன்மார் மற்றும் தாய்லாந்து தூதுவர்கள் தலைமையிலான தூதுக் குழுவினரைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ஆறுதல் தெரிவித்துள்ளார். ஒரு நாடு என்ற வகையில் மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குத் தேவையான பூரண ஒத்துழைப்பைப் பெற்றுத் தருவேன் என அவர் இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.