மிஹிந்தலை புகையிரத பாதை மக்களிடம் கையளிப்பு!

0
66

இந்திய கடன் உதவியின் கீழ் அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை சந்தி வரையான புதிய புகையிரத பாதை மற்றும் இலங்கை புகையிரத திணைக்களத்தினால் நவீனப்படுத்தப்பட்ட மிஹிந்தலை புகையிரத பாதை என்பன மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்துஇ நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இது இடம்பெற்றுள்ளது

அதன்படி மஹவ ஓமந்த திட்டத்தின் நான்கு கட்டங்களின் கீழ்இ இந்திய கடன் திட்டத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புகையிரத பாதையின் தூரம் 1.8 கிலோமீற்றர் மற்றும் அதற்காக செலவிடப்பட்ட தொகை 220 மில்லியன் ரூபாவாகும்.

இதில் இரண்டு பாலங்கள் அடங்கும் என்றும் மற்றும் மின்தலயா ரயில் நிலையம்இ மிஹிந்தலை சந்தி துணை நிலையம் சமகிபுர மற்றும் அசோகபுர ரயில் நிலையங்கள் ஆகியவை அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.