மீண்டும் ஆரம்பமாகவுள்ள இலகு ரயில் போக்குவரத்து திட்டம் 

0
183

ஜப்பான் அரசாங்கத்தின் அனுசரணையுடன் உத்தேச இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான யோசனை நேற்று(4) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளதுடன் அமைச்சரவையும் அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, கொழும்பில் உள்ள ஜப்பானிய இராஜதந்திர தூதரகத்துடன் மீண்டும் கலந்துரையாடல்களை முன்னெடுத்து குறித்த உடன்படிக்கையை எட்டுவதற்கு பொருத்தமான கால அட்டவணையை தயாரிப்பதற்கான விடயமும் யோசனையில் அடங்கியுள்ளது.