பாணந்துறையிலிருந்து கொழும்புக்கூடாக கொச்சிக்கடை வரையான கடற்பரப்பில், மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சகல படகுகளையும் மீன்பிடி நடவடிக்கையிலிருந்து வெளியேற்றுமாறு, கடற்றொழில் திணைக்களத்தால் சகல மாவட்டப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல், கடலில் மூழ்கிவருவதாக துறைசார்ந்த அதிகாரிகள் உறுதிபடுத்தியதன் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கப்பலிலிருந்த வெளியேறிய எரிபொருகள உள்ளிட்ட கழிவுகள் அத்துடன் கடலில் மிதக்கும் எரிந்த கொள்கலன்களின் இரும்புப் பாகங்கள், மீன்பிடிப் படகுகளில் மோதும் என்பதால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக ஏனைய பிரதேசங்களிலுள்ள மீனவர்களையும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.