மீனவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

0
164

உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்ட தமிழ்நாடு இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீனபிடிக்கச் சென்றனர்.

இலங்கை சிறையிலடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 18ஆம் திகதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளில் கறுப்புக் கொடி கட்டி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் நேற்று முன்தினம் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

இந்;நிலையில் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் காதர் பாட்ஷா போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் நேற்று மாலை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.