மீன் சந்தையில் மின்னல் தாக்கியதில் இருவர் கவலைக்கிடம்!

0
241

தம்புள்ளை – பெல்வெஹெர பிரதேசத்தில் உள்ள மீன் சந்தை ஒன்றில் மின்னல் தாக்கியதில் ஆண் ஒருவரும் பெண்ணொருவரும் பாதிக்கப்பட்டு தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் மழை பெய்த போது, மீன் கடையில் இருந்த பெண்ணும், மழைக்கு ஒதுங்கி நின்ற ஆண் ஒருவருமே இதில் பாதிக்கப்பட்டு தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
28 வயதுடைய இளைஞனும் 38 வயதுடைய பெண்ணும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவர்களில் ஒருவர் தற்போது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.