மீராவின் மரணம் தொடர்பில் அவரின் நண்பர்களிடமும், பெற்றோரிடமும் விசாரணை

0
71

கழுத்தில் சுருக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட விஜய் ஆண்டனியின் மகள் மீரா தொடர்பில் அவரின் நண்பர்களிடமும் பெற்றோரிடமும் விசாரணைகளை மேற்கொள்ள தேனாம்பேட்டை காவல் துறையினர் தீர்மானித்துள்ளனர். 

 மீராவின் மரணத்திற்கு முன்னதாக எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் காவல் துறையினர் மீட்டுள்ளனர். 

 குறித்த கடிதத்தில் காணப்படும் கையெழுத்து மீராவினுடையதா அல்லது வேறு எவராலும் எழுதப்பட்டிருக்கலாமா என்பது தொடர்பில் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. 

 மீராவின் மரணம் ஒப்பந்த மரணமாகவும் இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

 விஜய் ஆண்டனியின் மகள் பாடசாலையில் கலைநிகழ்ச்சிகளில் விரும்பி பங்கேற்பவர் மாத்திரமின்றி கல்வித்துறையிலும் சிறந்து விளங்கியுள்ளார்.  

எனினும் சிறிது காலம் அவர் நித்திரையின்றி அவதியுற்று வந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். 

 இந்த நிலையில் மன அழுத்தத்திற்காக அவர் மருத்துவ ஆலோசனைகளை பெற்று வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. 

எனினும் மீரா உயிரை மாய்த்துக்கொள்வதற்கு சில தினங்களுக்கு முன்னதாக அவர் குடும்ப உறுப்பினர்களுடன் எவ்வாறு நடந்துக்கொண்டுள்ளார் என்பது தொடர்பில் பெற்றோரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனை தொடர்ந்து மீராவின் பள்ளி நண்பர்கள் மற்றும் ஏனைய நண்பர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

அத்துடன் மீரா சிகிச்சை பெற்று வந்த வைத்தியரிடமும் விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஆழ்ந்த துயரத்திலுள்ள விஜய் ஆண்டனிக்கு திரையுலக நட்சத்திரங்கள் நேரில் சென்று ஆறுதல் கூறியும் வருகின்றனர்.

 விஜய் ஆண்டனியின் புதல்வி மீரா நேற்று அதிகாலை 03 மணியளவில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் மீராவின் இறுதிச்சடங்கு குறித்து இன்றைய தினம் அவரின் பெற்றோர் அறிவிக்கவுள்ளதாகவும் இந்திய தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.