முகக் கவசத்திலிருந்து விடுதலை – விரைவில் சகலருக்கும் நான்காவது தடுப்பூசி!

0
315

பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமல்ல என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் நேற்று முதல் நடைமுறைக்கு வருவதாக நாட்டின் புதிய சுகாதாரத் துறை அமைச்சர் சன்ன ஜயசுமண நேற்று அறிவித்தார்.

எனினும், எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் முகக் கவசம் அணிவது கட்டாயமானது என்றும் அவர் கூறினார்.

மேலும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நான்காவது தடுப்பூசியை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.