முகமாலையில், கியூ.ஆர் முறையில் எரிபொருள் விநியோகம் – மக்கள் ஆதரவு!

0
171

யாழ்ப்பாணம் தென்மராட்சி முகமாலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில், கியூ.ஆர் முறையில், எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் குழப்பமின்றி எரிபொருளை பெற்ற வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் முதல் கியூஆர் முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கியூஆர் முறைமையின் கீழான எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறுகள் ஏற்படுத்தாது மக்கள் ஆதரவு வழங்கிவருகின்றனர்.
அதிகாரிகளுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய வியோகஸ்தர்களுக்கும் மக்கள் பெரும் ஆதரவு வழங்கிவருதை அவதானிக்க முடிகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினத்தில் இருந்து முகமாலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கியூஆர் முறையில் எரிபொருள் விநியோகப்பட்டது.
இதன்போது மக்கள் எவ்வித குழப்பமும் இன்றி கியூஆர் முறையில் எரிபொருள் பெற்றதுடன் நேற்று இரவு 11.00 மணியை கடந்தும் உரிய ஒழுங்கில் அமைதியாக தமக்கான எரிபொருளை பெற்றுச் சென்றனர்.
குறிப்பாக முகமாலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாம் எந்த இடையூறுகளும் இல்லாமல் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முடிவதாக மக்கள் தெரிவித்ததுடன் இங்கு கடமையில் உள்ளவர்களையும் மக்கள் பாராட்டிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.