முட்டை விலையை 6 ரூபாவால் குறைக்க எதிர்பார்ப்பு

0
165

முட்டை ஒன்றின் விலையை 6 ரூபாவால் குறைக்க முடியும் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கால்நடை தீவனத்திற்கு விதிக்கப்படும் VAT வரியை அதிகாரிகள் நீக்கினால் முட்டையின் விலையை குறைக்க முடியும் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

VAT நீக்கப்பட்டால், அதிகாரிகள் மேலும் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்றார்.

VAT நீக்கப்பட்டதன் மூலம் உள்ளூர் உற்பத்தியும் அதிகரித்து உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

இதேவேளை, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர் இன்று மேலும் ஒரு மில்லியன் முட்டைகளை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.