மெகலேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலங்குட்டிவ ஆற்றில் நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.லிகொலவெவ, சியம்பலங்காமுவ பிரதேசத்தில் வசிக்கும் 66 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், குறித்த பெண் நேற்று முன்தினம் மாலை ஆற்றில் நீராடச் சென்ற போதே இச்சம்பவம் நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.பிரதேசவாசிகள் முதலையிடமிருந்து பெண்ணை மீட்டு தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அப்பெண் உயிரிழந்துள்ளார்.