’முன்னாள் கடற்படை தளபதி புலிகளின் பிரதானி அல்ல!’

0
13

முன்னாள் கடற்படை தளபதி கைது செய்யப்பட்டு அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவரை அடையாளம் காட்ட   விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின்  பிரதானி அழைக்கப்பட்டுள்ளார்.இது முற்றிலும் தவறானது.அரச அதிகாரிகளை மலினப்படுத்தும் வகையில் இந்த அரசாங்கம் செயற்படுகிறது. என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எம்.பி. நாமல் ராஜபக்‌ஷ குற்றம்சாட்டினார்.

 பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (05) அன்று  இடம்பெற்ற பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வது  தொடர்பான  விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர்  இவ்வாறு குற்றம்சாட்டினார்

மேலும் அவர் பேசுகையில், பொலிஸ்மா அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான விவாதம்,நபர் பற்றி எமக்கு பிரச்சினையில்லை. ஆனால், அந்த உயரிய பதவி  பிரச்சினைக்குரியதாக உள்ளது.  இந்த அரசாங்கம் அரச அதிகாரிகளை மலினப்படுத்தும் வகையில் செயற்படுகிறது. முன்னாள் கடற்படை தளபதி கைது செய்யப்பட்டு அடையாள  அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவரை அடையாளம் காட்ட  விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின்  பிரதானி அழைக்கப்பட்டுள்ளார்.இது முற்றிலும் தவறானது.

அரச அதிகாரிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் அரசியல் நோக்கத்துடன் செயற்படுகிறது. இதனால் அரச நிர்வாகம் முழுமையாகப் பாதிக்கப்படும். அரசாங்கத்தின் குறுகிய அரசியல் நோக்கத்துக்குப் பாராளுமன்றமும் தற்போது பயன்படுத்தப்படுகின்றது என்றார்.