முன்னாள் ஜனாதிபதியின் கொடியை படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர் கைது!

0
172

ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இலட்சினை கொடியை, படுக்கை விரிப்பாக பயன்படுத்தி, சமூக வலைத்தளத்தில் காணொளியைப் பகிர்ந்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் இன்று காலை கொழும்பு வெல்ல வீதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
54 வயதான அவரை வெல்லம்பிட்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர், ஐக்கிய மக்கள் சக்தியின் துறைமுக தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் களுதந்திரிகே உதேனி ஜயரத்ன என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.