முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, எவருக்கும் உண்மையாக இருக்க மாட்டார் – உதய கம்மன்பில

0
209

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன, எவருக்கும் உண்மையாக இருக்க மாட்டார் என்பதை, நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

‘2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஒரு நாள் இரவு, மஹிந்த ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைந்து அப்பம் சாப்பிட்டு விட்டு, மறுநாள் காலை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, ஜனாதிபதி தேர்தலில், பொது வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கூட, மைத்ரிபால சிறிசேன உண்மையாக இருக்கவில்லை.

அரசியலமைப்புக்கு முரணாக, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி, நாட்டில் பாரிய அரசியல் நெருக்கடிகளை தோற்றுவித்தார்.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து, கடந்த ஜனவரி மாதம் ஹெலி கொப்டர் சின்னத்தில் புதிய அரசியல் கூட்டணியை அமைத்தோம்.

கூட்டணியில் ஒன்றிணைந்து செயற்படுவதாக குறிப்பிட்டு விட்டு, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், உயர் நீதிமன்றம் அவருக்கு நட்டஈடு விதித்த பின்னர், கூட்டணியில் இருந்து விலகினார். என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.