கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்கு, குடிநீர் விநியோகத்திற்கு என கொண்டுவரப்பட்டு, துறைமுகத்தில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நீர் விநியோக குழாய்களை விடுவித்து, பளை பிரதேசத்திற்கான நீர் விநியோக நடவடிக்கை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கு, கடிதம் எழுதியுள்ளார்.