முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் தாமதமின்றி மீள ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற அதிகாரிகள் துப்பாக்கிகளை பெற்றவர்களுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் 225 முன்னாள் உறுப்பினர்களில் நூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், தனிப்பட்ட பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.