பொரளை ருஹுனு கலா மாவத்தையில் கைவிடப்பட்ட அரச கட்டிடம் தற்போது பல்வேறு முறைகேடுகளின் புகலிடமாக மாறியுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.பொரளை இளைஞர் சேவை மன்றத்திற்கு முன்பாக குறித்த அரச கட்டிடம் அமைந்துள்ளது.ஒரு காலத்தில் கிராம உத்தியோகத்தர் அலுவலகமாக செயல்பட்டு வந்த இந்த கட்டிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்டிருந்தது.
இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் இக்கட்டிடம் போதைப்பொருள் பாவனையாளர்களின் புகலிடமாக அப்பகுதியில் மாறியுள்ளது.போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகம் கூடும் இப்பகுதிக்கு இரவு நேரங்களில் வந்து செல்வது ஆபத்தானது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்தக் கட்டிடத்திற்கு எமது குழு சென்ற போது அங்கு கடும் துர்நாற்றம் வீசியதுடன் போதைப்பொருள் உட்கொண்டதாகக் கருதப்படும் பெண் ஒருவர் அங்கே படுத்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
பொரளை போன்ற புறநகர் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்று மக்களுக்கு துன்பம் தரும் இடமாக மாற்றுவதற்கு இடமளிக்காமல் அதனை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு அல்லவா?