முல்லைத்தீவில் கோர விபத்து : ஒருவர் பலி!

0
94

ஏ-09 வீதியில் திருமுருகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று அதிகாலை விபத்து இடம்பெற்றது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ஹையஸ் ரக வாகனம் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் நால்வர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.