முல்லைத்தீவில் புலிகளின்ஆயுதங்களைத் தேடி 2வது நாளாக அகழ்வு

0
31

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் காலத்தில் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் ஆயுதங்களைத் தேடி இரண்டாவது நாளாக இன்றும்; அகழ்வு பணி முன்னெடுக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள விளையாட்டு கழக மைதானத்தில் அகழ்வு பணி இடம்பெற்று வருகிறது. கொழும்பு நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப்பணியானது கொழும்பில் இருந்து வருகைதந்த பொலிஸ் குழுவினரால் நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்டது. அகழப்பட்ட குழிக்குள் நீர் வரத்து அதிகரித்ததால் இன்று காலை நீர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.