முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் முத்து விநாயகபுரம் சௌபாக்கியா உற்பத்தி கிராமத்தில், பால்சார் உற்பத்தி பயிற்சி நெறி

0
181

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, முத்து விநாயகபுரம் சௌபாக்கியா உற்பத்தி கிராமத்தின், 15 நேரடி பயனாளிகளுக்கான, பால்சார் உற்பத்தி பொருட்கள் தொடர்பான தொழில்நுட்ப பரிமாற்ற இரு நாள் பயிற்சி நெறி வழங்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் நிதி பங்களிப்புடன், மாவட்ட விதாதா வள நிலைய தொழில்நுட்ப வள அனுசரனையுடன், பயிற்சி இடம்பெற்றது. வளவாளராக, மாவட்ட விதாதா உத்தியோகத்தர் ம.தவேந்திரன் பங்கேற்றார். இதன் போது, பால்சார் உற்பத்தி பொருட்களான யோக்கட், தயிர், பால் ரொபி, பன்னீர், பால் கோவா உற்பத்திகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படதுடன், உற்பத்திப் பொருட்களுக்கான தரச்சான்றிதழ்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், உள்ளுர் உற்பத்தியாளர்கள், செய்முறை பயிற்சிக்காக தயாரித்த உற்பத்திகளை, கிராம மக்கள், ஆர்வத்துடன் பார்வையிட்டது மட்டுமன்றி, அவற்றை விலை கொடுத்து வாங்கிச் சென்றனர். இந்த நிகழ்வில், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கிருபாசுதன், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்கள், விதாதா வள நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.