முல்லைத்தீவு தேராவில் விவசாய பண்ணையில், நேற்று வயல் விழா இடம்பெற்றது.
சிறு போகத்தில், உளுந்து செய்கையில் ஏற்படும் சித்திர வடிவ வைரஸ் நோய் தாக்கம் தொடர்பாக, எவ்வாறான மாற்று நடவடிக்கைகளை கையாளலாம் என்பது தொடர்பில், விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் வழங்கப்பட்டதுடன், இங்கே மேற்கொள்ளப்பட்ட உளுந்து செய்கை தொடர்பாக, செயன்முறை விளக்கமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், மாகாண விவசாய பணிப்பாளர் செந்தில்குமரன் சுகந்தி, மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் யாமினி சசீலன் உள்ளிட்ட மாகாண அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு விவசாய திணைக்கள அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.