முல்லைத்தீவு மாங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயம்

0
68

முல்லைத்தீவு மாங்குளத்தில், ஏ9 வீதியில், கன ரக வாகனம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.