மக்களுக்கு ஒரே நாளில் பல்துறையில் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் வடக்கு மாகாண நடமாடும் சேவை நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டம் வெலிஓயா பிரதேச செயலக பிரிவில் நடைபெற்றது. வெலிஓயா பிரதேச செயலாளரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக வடமாகாண செயலகத்தின் பிரதம செயலாளர் சமன் பந்துலசேன மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நடமாடும் சேவையில் மாகாண சுகாதார திணைக்களம், மாகாண கல்வித் திணைக்களம், மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மாகாண விவசாயத் திணைக்களம், மாகாண சமூக சேவைகள் திணைக்களம், பிராந்திய உள்ளூராட்சித் திணைக்களம், பதிவாளர் நாயகம் திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம், சமுர்த்தி திணைக்களம், சிறு கைத்தொழில் பிரிவு, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை முதலிய திணைக்களங்களினூடாக வெலிஓயா பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்கள் நன்மை அடைந்தனர். நிழக்வில் வடமாகாண அமைச்சின் செயலாளர்கள், திணைக்களங்களின் பணிப்பாளர்கள், பிரதிப்பணிப்பாளர்கள், உதவி ஆணையாளர்கள், மாவட்டப் பணிப்பாளர்கள், உதவிப்பணிப்பாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
Home வடக்கு செய்திகள் முல்லைத்தீவு – வெலிஓயா பிரதேச செயலக பிரிவில் வடக்கு மாகாண நடமாடும் சேவை முன்னெடுப்பு