முல்லை.அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் களவிஜயம்

0
156

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ‘புலிக்குளம்’ பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் களவிஜயத்தினை மேற்கொண்டனர்.

குளத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் தற்போது பயன்பாடற்று இருக்கும் இக்குளத்தினை எதிர்காலத்தில் அபிவிருத்தி நோக்கத்திற்காக எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற நோக்கிலும் இந்த களவிஜயம் அமைந்தது.

களவிஜயத்தில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் நிர்வாகம் க.கனகேஸ்வரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி எஸ்.குணபாலன், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் ஜெயபவாணி, துணுக்காய் பிரதேச செயலாளர் லதுமீரா, விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

குறித்த குளம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆளுகையில் இருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தொடர்ச்சியாக அபிவிருத்தி குழு கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டு வந்த நிலையில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.