யாழ்ப்பாணம் சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிளிநொச்சி முழங்காவில் ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவ பொருட்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு முழங்காவில் ஆதார வைத்தியசாலைக்கு 5 இலட்சத்து 40 ஆயிரத்து 430 ரூபா பெறுமதியான மருத்துவப் பொருள்களை வைத்திய அத்தியட்சகரான மருத்துவர் க.செல்வநாதனிடம் மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார். இந்த மருத்துவப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டனர்.