முழு இலங்கை மக்களும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கையான செய்தி!

0
87

இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொண்டுள்ள சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடி வருவதாகவும் எதிர்வரும் சில தினங்களில் அது தொடர்பிலான தமது நிலைப்பாடு அறிவிக்கப்படும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றுள்ள சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 45 இலட்சத்து 3 ஆயிரத்தி 930 வாக்குகளைப் பெற்றிருந்தாலும்இ அரசாங்கத்திற்கு எதிராக 59 இலட்சத்து 6 ஆயிரத்தி 880 வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்ட ஒரு அரசாங்கம் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆறு மாதங்களுக்குப் பிறகு வரலாற்று தோல்வியைப் பதிவு செய்துள்ளது.

முழு இலங்கை மக்களும் இதன் மூலம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கையான செய்தியைக் கொடுத்துள்ளனர் என்றே நினைக்கிறேன்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களில் 50 வீத வாக்குகளைப் பெற அரசாங்கம் தவறியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் பொய்கள் அல்லது தவறான தகவல்களை சமூகமயமாக்குவதன் இறுதி விளைவு என்றே நான் நினைக்கிறேன்.
எனவேஇ கூட்டு எதிர்க்கட்சி ஒற்றுமையாகச் செயல்பட்டுள்ளது.

அவர்களால் அதிகமான சபைகளில் பெரும்பான்மை அதிகாரத்தைப் பெற முடிந்துள்ளன.

எனவே எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொண்டுள்ள சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம்.
எதிர்வரும் சில தினங்களில் எமது நிலைப்பாட்டை வெளியிடுவோம் என வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.