முழு நாடும் தற்போது குண்டர்களுக்கு கீழ் பணிந்துள்ளது என்று ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முழு நாடும் தற்போது குண்டர்களுக்கு கீழ் பணிந்துள்ளது. இந்த குண்டர்களின் அடாவடி செயற்பாடுகள் இன்னும் நிறுத்தப்படவில்லை.
உலகத்திடம் கையேந்திக் கொண்டிருக்கும் துரதிஷ்டவசமான நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது. அரசியல்வாதிகள் மற்றும அதிகாரிகளால் செய்யப்பட்ட குற்றச்செயல்கள் காரணமாகவே நாடு இந்த நிலைமையை அடைந்துள்ளது.