மூன்று படுகொலை சம்பவங்களில் பெண்ணொருவர் உட்பட மூவர் படுகொலை

0
155

கொழும்பு, கண்டி, குருணாகல் ஆகிய மாவட்டங்களில் மூன்று கொலை சம்பவங்கள் நேற்று பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று (3) காலை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மூன்று சம்பவங்களிலும் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைவாக கொழும்பு முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வைத்தியசாலை சுற்றுவட்டப் பாதையில் வைத்து நபரொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த நபர் பலியாகியுள்ளார்.

அம்பத்தல பிரதேசத்தை சேர்ந்த 38 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவரை முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கண்டி கடுகண்ணாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்மிவல, மெனிக்திவெல பிரதேச்சில் பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளன்.

ரத்மிவல, மெனிக்தவிவெல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை குருணாகல் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 40ஆம் ஏக்கர் பிரதேசத்தில் நபரொருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிட்டதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது நபரே படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்டவர் முன்னதாக தனது நண்பரின் பிறந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றிருந்த போது நண்பரின் மனைவியுடன் ஏற்பட்ட முறுகலின் போது வீட்டிலிருந்தவர்கள் குறித்த இளைஞனை பொல்லால் தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மூவரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் இருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.