மூன்று முக்கிய மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்றுள்ளது.
மத்திய ஆசியாவைச் சேர்ந்த தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள், தங்களது மூன்று நாட்டு எல்லைகள் சந்திக்கும் புள்ளியை நிறுவதற்காகவும், அவர்களுக்கு இடையில் நட்புறவு நிலவவும் குஜ்ஜாந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்நிலையில், இந்த திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து, அந்நாட்டு அமைச்சர் அஹமது பின் அலி அல் அயிக் கூறுகையில், இந்த ஒப்பந்தமானது மத்திய ஆசியப் பகுதியில் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தி சர்வதேச அளவில் அமைதியை நிலைநாட்டும் என அமீரகம் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.