மூன்று வெவ்வேறு பகுதிகளில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது!

0
26

நாட்டில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கல்கிஸ்ஸையில் 10 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரும்,  ராகுலா வீதியில் 5 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன்  ஒருவரும், இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் 5 கிராம் மற்றும் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் 32, 39 மற்றும் 54 வயதுடைய மொரட்டுவ, இரத்மலானை மற்றும் கல்கிசை பகுதியை சேர்ந்தவர்கள் என  பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.