வட அமெரிக்க நாடான மெக்சிகோவை தாக்கிய ‘ஓடிஸ்’ சூறாவளியில் சிக்கி, 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் ‘ஓடிஸ்’ சூறாவளி நேற்று முன்தினம் கரையை கடந்தது.
இதன்போது பெய்த கனமழை மற்றும் கடும் காற்று காரணமாக மெக்சிகோவின் கடற்கரை பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
சூறாவளி கரையைக் கடந்த அகாபுல்கோ பகுதியில் மரங்கள் சாய்ந்து, மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதுடன், 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.
இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரையில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.