அரசியலமைப்பின் 107ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான 4 புதிய நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே.எம்.ஜி.எச்.குலதுங்க, டி.தொடவத்த மற்றும் ஆர்.ஏ.ரணராஜா ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான புதிய நீதியரசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் சிரேஷ்ட பிரதி மன்றாடியர் நாயகம் எம்.சி.எல்.பி.கோபல்லவவும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்; இன்று குறித்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.