மொட்டுக் கட்சிக்கான மக்கள் ஆதரவு குறையவில்லை – ரோஹித அபேகுணவர்தன எம்.பி

0
120

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் கட்சியின் தலைமைத்துவத்துக்கும் மக்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கின்றது என்பது களுத்துறை கூட்டத்தினூடாக நிருபிக்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற பாரிய போராட்டங்களின் பின்னர் ஸ்ரீ ல்ஙகா பொதுஜன பெரமுனவை பாரியளவில் விமர்சித்தனர்.

கட்சியின் தலைமைத்துவத்தையும் பாரியளவில் விமர்சித்தனர்.

இந்த விமர்சனங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆயுட்காலம் முடிந்துவிட்டதாக பலர் கூறினர்.

கட்சியானது துண்டுத் துண்டாக உடைந்துவிட்டதாகவும் கூறினர்.

10 பேரைக்கூட அந்தக் கட்சிக்குள் இணைத்துக்கொள்ள முடியாது என்று கூறினர்.

இவ்வாறு கட்சிக்கு சேறு பூசும் வகையில் பல்வேறு கருத்துக்களை விமர்சனங்களை முன்வைத்தனர்.

எனினும் மஹிந்த ராஜபக்ஷ என்ற நபருக்கும் அவர் தலைமையிலான கட்சிக்கும் நாட்டும் மக்கள் இன்னும் தங்களது ஆதரவை வழங்கிக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதை மீண்டும் நாம் நிருபித்துக் காட்டிவிட்டோம்.

ஒன்றாக எழுவோம் களுத்துறையிலிருந்து ஆரம்பிப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் இதனை நாம் நிருபித்துவிட்டோம்.

எமது கட்சிக்கு எவ்வாறான மக்கள் ஆதரவு இருக்கின்றது என்பதை மீண்டும் நாம் நிருபித்துவிட்டோம்.

அதேபோன்று எமது தலைவரை மக்கள் தொடர்ந்தும் நேசிக்கின்றனர் என்பதையும் களுத்துறையில் நடத்திய கூட்டத்தினூடாக நிரூபித்துக் காட்டிவிட்டோம்.

எமது கட்சியின் மக்கள் ஆதரவை திரட்டும் இந்த பணியானது எதிர்வரும் வாரம் கண்டி, நாவலப்பிட்டி தொகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேபோன்று புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் எமது கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.