2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% என்ற நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை, 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உபரி நிலையை அடைய முடிந்தது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7% ஆக இருந்த வரவு செலவுத் திட்ட முதன்மைப் பற்றாக்குறையானது 2023 ஆம் ஆண்டில் முதன்மை வரவு செலவுத் திட்ட உபரியை ஏற்படுத்த முடிந்தது.
இது சுதந்திரம் அடைந்த 76 ஆண்டுகளில் 6 ஆவது தடவையாக இலங்கையால் முதன்மை வரவு செலவுத் திட்ட உபரியை உருவாக்க முடிந்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
09ஆவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஆற்றிய கொள்கை விளக்க உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.