மொத்த குடும்பத்தையும் காப்பாற்றிய ஒன்றை நாய்

0
20

சீரற்ற காலநிலையால் 4 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாய் ஒன்று முழு குடும்பத்தையும் காப்பாற்றியுள்ளது.களுத்துறை, கமகொட பகுதியில் சீரற்ற காலநிலையால் பெய்த கடும் மழையுடன் கூடிய காற்று காரணமாக புளியமரத்தின் கிளையொன்று வீடொன்றின் மீது வீழ்ந்துள்ளது.

இதனை அறிந்த நாய் அதிகாலையில் வீட்டு உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருந்த படுக்கைக்கு சென்று நுளம்பு வலையையும் அவர்கள் அணிந்திருந்த ஆடையையும் கடித்து இழுத்து எழுப்பியுள்ளது.
வீட்டில் உள்ள அனைவரையும் எழுப்பி வெளியே அழைத்து வெளியே வந்து சில நிமிடங்களின் மரத்தின் கிளை வீட்டின் கூரையின் மீது விழுந்ததில் அவர்களின் கட்டிலின் மீது விழுந்துள்ளது.நாயின் இந்த செயற்பாட்டால் வீட்டில் இருந்த உரிமையாளர்கள் அனைவரும் பேராபத்தில் இருந்து தப்பித்துள்ளனர்.