மொரவெவில் பாம்புக் கடிக்கு இலக்காகிய பெண் உயிரிழப்பு

0
92

திருகோணமலை மொரவௌ பொலிஸ் பிரிவில், பாம்புக் கடிக்கு இலக்காகிய மூன்று மாத கர்ப்பிணித் தாயொருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
மொரவௌ ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இமோஷா குமாரி என்ற கர்ப்பிணித் தாயே உயிரிழந்தவராவர்.
மேலதிக விசாரணைகளை மொரவௌ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.