மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச வைபவம், கொழும்பில் நாளை (5) காலை 9 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
இந்தியப் பிரதமர் இன்று (4) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரவுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
“ஒரு நூற்றாண்டு நட்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்கான பிணைப்பு” என்ற கருத்தை உறுதிப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் உத்தியோகபூர்வ வரவேற்பு வைபவத்தின் பின்னர், கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு வரும் இந்தியப் பிரதமர், அங்கு இந்திய-இலங்கை கூட்டு செய்திக்குறிப்பு வெளியீட்டில் பங்கேற்கவுள்ளார்.
நரேந்திர மோடி இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவும் இருதரப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பில் கலந்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.