அநுரதபுரம், எப்பாவல பிரதேசத்தில் கெக்கிராவ நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எப்பாவல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கெக்கிராவ – எப்பாவல பிரதான வீதியின் 14 கிலோ மீற்றர் கட்டை பகுதியில் இந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 25 வயதுடைய மரதன் கடவல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.
மோட்டார் சைக்கிள் செலுத்திய நபரின் கவனயீனமே விபத்து ஏற்படக் காரணம் என்றும் விபத்து தொடர்பில் எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.