மட்டக்களப்பு காத்தான்குடி இளைஞர் வலுவூட்டலுக்கும் சமூக அபிவிருத்திக்குமான அமைப்பான யஸ்டோ அமைப்பின் முப்பெரும் நிகழ்வு இன்று காத்தானாகுடியில் நடைபெற்றது.
வசதி குறைந்த பார்வை இடர் கொண்ட பாடசாலை மற்றும் மத்ரஸா மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடி வழங்கி வைக்கப்பட்டதுடன் அமைப்பின் கல்விப்பிரிவின் கீழ் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் எம்.ஏ.நௌஸாத் அலி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாறை சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் திருமதி அலிமா ரஹ்மான் விஷேட அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்துடன் உலமாக்கள் முக்கிஸ்தர்கள் பிரமுகர்கள் யஸ்டோ அமைப்பின் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்