மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கரடியனாறு பகுதியிலுள்ள குளம் ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற நிலையிலேயே அவர் யானையின் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
மயிலவெட்டுவான் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.