யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு: 11 வயது சிறுவன்,18வயது யுவதி மரணம்!

0
252

யாழ்ப்பாண குடாநாட்டில் நேற்று மாத்திரம் இருவர் டெங்கு நோயின் தாக்கத்தால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
கொடிகாமத்தைச் சேர்ந்த 11 வயதுடைய வி.அஜேய் என்ற சிறுவனும், அல்லைப்பிட்டி 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கஜந்தினி யோகராசா என்ற 18 வயதுடைய யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
டெங்கு காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்
என சுகாதாரத் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.