யாழ்ப்பாணத்தில் புழுக்களுடன் கூடிய தயிரை விற்பனை செய்த பாற்சாலையை சீல் வைத்து மூட உத்தரவிட்ட யாழ். நீதிவான் நீதிமன்றம் உரிய நிறுவனத்துக்கு 30 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துள்ளது.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இயங்கும் பாற்சாலையே இவ்வாறு சட்ட நடவடிக்கைக்கு உள்ளானது.
குறித்த பாற்சாலையில் விற்பனையாகும் பால் மற்றும் பால் பொருட்கள் தரமற்றவையாக உள்ளதுடன், அங்கு பெரும் சுகாதார சீர்கேடும் நிலவுவதாக மக்கள் உரிய சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடுகளை செய்த நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.