யாழில் நண்டு தொழில் இலக்கிய பண்பாட்டு கூடல்

0
86

காவேரிக் கலாமன்றம் நடத்திய, நண்டு தொழில் இலக்கிய பண்பாட்டு கூடல், இன்று, யாழ்ப்பாணம் வேலணை செட்டிப்புலத்தில் இடம்பெற்றது.

நண்டு தொழில் இலக்கிய பண்பாட்டு கூடலின் தலைவர் ரஜீவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், விருந்தினர்களாக, காவேரிக் கலாமன்ற நிறைவேற்று இயக்குனர் ஈ.எஸ்.யோசுவா,எழுத்தாளர் கருணாகரன், கிராம உத்தியோகத்தர் கோகிலரூபன்,கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் மார்க்கண்டுதாசன் ஆகியோர் பங்கேற்றதுடன், சமூக மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களும் பங்கேற்றனர்.

இணை அனுசரணையை, தமிழியல் ஆய்வு நடுவகம், செட்டிப்புலம் வேலணை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், ஐயனார் ஆலய பரிபாலன சபை, ஐயனார் விளையாட்டு கழகம், சனசமூக நிலையம், இளைஞர் கழகம் ஆகியன வழங்கியிருந்தன.இதன் போது, நண்டு தொழில் முறைப்பார்வை என்ற தலைப்பின் கீழ் அ.இன்பராசாவும்,நண்டும் ஊட்டச்சத்தும் என்ற தலைப்பின் கீழ் திருமதி டெபோராவும்,நண்டு சந்தைப்படுத்தலும் வியாபார முகாமைப்படுத்தலும் என்ற தலைப்பின் கீழ் பெசில் பெனட்வும், ஆய்வுரைகளை மேற்கொண்டனர்.